search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் நகை பறிப்பு"

    திருவள்ளூர் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த திருகோவில்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாதமுனி. விவசாயி. இவரது மனைவி அனிதா (49). இவர் வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க தாலி சரடு மற்றும் செயினை 2 பேர் பறித்தனர்.

    இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். திருடன்... திருடன்... என கூச்சலிட, அந்த 2 பேரும் பைக்கில் தப்பி ஓடினார்கள். அனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அனிதா சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, செயினை பறித்த கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
    மதுரையில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் வக்கீலிடம் 3¼ பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
    மதுரை:

    மதுரை அய்யர் பங்களா அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகள் பூங்கொடியாள் (வயது 35) வக்கீல்.

    இவர் இருசக்கர வாகனத்தில் உத்தங்குடி சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின் தொடர்ந்தனர்.

    அவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென பூங்கொடியாள் அணிந்திருந்த 3¼ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அண்ணாநகர் சதாசிவம் நகர் நக்கீரர் குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் பெங்களூருவில் என்ஜினீயராக உள்ளார். அவரது மனைவி ஜனனி (23).

    சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அவர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து அண்ணா நகர் போலீசில் ஜனனி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை திருடிய மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.
    கும்பகோணத்தில் ரேசன் கடை பெண் ஊழியரிடம் 5 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் வட்டி பிள்ளையார் கோவிலை சேர்ந்தவர் கபீர்தாசன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தி (வயது 45). இவர் ரே‌ஷன் கடை ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சாந்தி, தனது மகனை கும்பகோணம் பஸ் நிலையத்திற்கு அழைப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்

    அப்போது மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து சாந்தியை வழிமறித்து அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து சாந்தி கும்பகோணம் தாலுகா போலீஸ் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுவண்ணாரபேட்டையில் டி.ஜி.பி. அலுவலக அதிகாரி மனைவியிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை திருவள்ளுவர் குடியிருப்பில் வசித்து வருபவர் நாமதுரை. இவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அன்னலட்சுமி.

    நேற்று இரவு அன்னலட்சுமி தனது சகோதரியுடன் வீட்டு அருகே உள்ள கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், அன்னலட்சுமி கழுத்தில் இருந்த 12 பவுன் தங்க செயினை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி. டி.வி. கேமராவை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மாமல்லபுரத்தில் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியை சேர்ந்த மோகனா. இவர் உறவினருடன் கோவளம் அருகே உள்ள மருத்துவமணைக்கு சென்று விட்டு ஷேர் ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். வரும் வழியில் கிருஷ்ணன்காரனை சாய்பாபா கோயிலுக்கு செல்ல பஸ் நிறுத்தத்தில் இருவரும் இறங்கினார்கள்.

    அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம வாலிபர் ஒருவர் தன்னை சாதாரண உடையில் ரோந்து சுற்றும் ரகசிய போலீஸ் என அவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு வழிப்பறி கொள்ளை அதிகமாக நடக்கும் பகுதி இது. அதனால் நகைகளை பத்திரமாக கைபையில் வைத்து பாதுகாப்பாக எடுத்து செல்லுங்கள் என எச்சரிப்பது போல் கூறிவிட்டு சென்றான்.

    இதை நம்பிய மோகனா தனது 11பவுன் நகை மற்றும் செல்போனை கை பையில் வைத்து விட்டு நின்றார். அப்போது அதே வாலிபர் மின்னல் வேகத்தில் பைக்கில் வந்து மோகனாவின் கைப்பையை பறித்து தப்பி சென்று விட்டான்.

    சிவகங்கையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்துச் சென்றனர்.

    விருதுநகர்:

    சிவகாசி தில்லை நகரை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மனைவி ஜெயக்கொடி (வயது 45). இவர், உறவுக்கார பெண்ணுடன் மொபட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சென்றார்.

    ஜக்கம்மாள் கோவில் அருகே சென்றபோது 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெயக்கொடி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசில் ஜெயக் கொடி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீடு புகுந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதி பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கள்ளகுறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சி அருகே உள்ள புது உச்சிமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் விவசாயி. இவரது மனைவி அலமேலு(வயது23). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் நேற்று சொந்த வேலை காரணமாக செல்வம் வெளியூருக்கு சென்று விட்டார்.

    அலமேலு தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று இரவு உணவை முடித்து விட்டு அலமேலு அவரது குழந்தையுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    இதை நோட்டமிட்ட மர்மமனிதர்கள் சிலர் நள்ளிரவில் அலமேலுவின் வீட்டிற்குள் புகுந்தனர்.

    பின்னர் அவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த அலமேலுவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கலியை பறித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு அலமேலுவின் குழந்தை கதறி அழுதது.

    இந்த சத்தம் கேட்டு அலமேலு கண் விழித்தார். அழுது கொண்டிருந்த குழந்தையை சமதான படுத்தினர். அப்போது அவர் தனது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பார்த்தார். அதை காணவில்லை. அப்போது தான் சங்கிலி திருடு போயிருப்பது அலமேலுவுக்கு தெரிய வந்தது.

    பின்னர் அவர் திருடன்...திருடன்...என அலறினார் . அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்களிடம் நகை திருடு போன சம்பவத்தை கூறினார்.

    உடனே அந்த பகுதி பொதுமக்கள் திருடர்களை அந்த பகுதியில் தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மர்ம மனிதர்கள் திருடி சென்ற நகையின் மதிப்பு ரூ1½ லட்சம் ஆகும்.

    இது குறித்து வரஞ்சரம் போலீசில் அலமேலு புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகமுத்து வழக்கு பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலை வீசி தேடி வருகிறார்.

    கோவிலுக்கு வந்த பெண்ணிடம் 6 பவுன் தாலிசெயினை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி, தேங்காய் வியாபாரி. இவரது மனைவி ஹேமலதா (வயது 40).

    சம்பவத்தன்று இவர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். சாமி கும்பிட்ட பின் ஹேமலதா 16 கால் மண்டபம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் ஹேமலதா கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இது குறித்த புகாரின் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த நபர்களை தேடி வருகின்றனர்.

    காட்பாடி அருகே ரெயிலில் பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வெங்கடாசலம் தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி ராகினி (வயது 65). கணவன்-மனைவி இருவரும் கோவையில் நடைபெறும் யோகா பயிற்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் வெஸ்ட்கோட்ஸ் ரெயிலில் சென்றுள்ளனர்.

    காட்பாடி ரெயில்நிலையத்தில் நின்று பயணிகள் இறங்கியதும் ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. இந்த நேரத்தில் ராகினி பயணம் செய்த அதே பெட்டியில் பயணம் செய்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி, ராகினி கழுத்தில் கிடந்த 16 பவுன் செயினை பறித்துக்கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பிச்சென்றுவிட்டார். ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்குவந்ததும் இதுபற்றி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் ராகினி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமியை தேடிவருகிறார்.

    திருப்பூர் அருகே பனியன் நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்தி நகர் இ.பி. காலனியை சேர்ந்தவர் கிருஷ்ண குமார். இவரது மனைவி நித்தா (27). அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் அக்கவுண்டண்ட் ஆக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு நடந்து சென்றார். பழனிசாமி நகரில் சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நித்தா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தனர்.உடனே சுதாரித்து கொண்ட நித்தா செயினை இறுக்கி பிடித்தார். இதில் செயின் அறுந்து 3 பவுன் நித்தாவிடமும், மற்ற 3 பவுன் வாலிபர்களிடமும் சிக்கியது. நித்தா சத்தம் போட்டார். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.அதற்குள் 2 வாலிபர்களும் தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு நகை பறித்த 2 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள்.

    பெரியபாளையம் அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள பனையஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மணிமேகலை. இவர் ஆரணி பஜார் வீதிக்கு வந்து வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் மணிமேகலை கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் செயினை பறித்து தப்பிச் சென்று விட்டனர்.

    இது குறித்து ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் விசாரணை செய்து வந்தனர்.

    இதுதொடர்பாக திருநின்றவூர் அருகே உள்ள பாக்கம் கிராமத்தை சேர்ந்த பலராமன், மணிகண்டன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான 2 பேரையும் போலீசார் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    தென்காசி அருகே தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    தென்காசி அருகே உள்ள ஆய்க்குடியை அடுத்த அகரக்கட்டு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சங்கரம்மாள் (வயது33). நேற்று அதிகாலை இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது கோட்டைச் சுவற்றை ஏறி குதித்து உள்ளே நுழைந்த வாலிபர், சங்கரம்மாள் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை இழுத்து அறுத்தார்.

    அப்போது சங்கரம்மாள் விழித்து கொண்டதால் செயினை பிடித்து கொண்டு திருடன் திருடன் என கூச்சலிட்டார். ஆனாலும் கொள்ளையன் செயினின் ஒரு பகுதியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டான். இதில் 23 கிராம் எடையுள்ள பகுதி கொள்ளையனின் கையில் சிக்கி விட்டது. மீதமுள்ள 9 கிராம் எடையுள்ள செயின் சங்கரம்மாள் கையில் இருந்தது.

    உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கொள்ளையனை விரட்டி சென்று தேடினார்கள். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து சங்கரம்மாள் ஆய்க்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

    ×